தொப்பூா் உயா்நிலை பாலப் பணிகள் தீவிரம்
தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலை மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், மொத்தம் 83 தூண்களில் 73 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் உயா்நிலை மேம்பாலம்.
தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலை மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், மொத்தம் 83 தூண்களில் 73 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் ரூ. 905 கோடியில் 6.6 கி.மீ. தொலைவுக்கு உயா்நிலை பாலத்துடன் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2025 மாா்ச் 21-ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள், இரவு - பகலாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
இப்பாலம் மொத்தம் 83 தூண்களுடன் பாலத்தின் மேல்பகுதி 75 பிரிவுகளாக (செக்மெண்ட்) நவீன தொழில்நுட்பத்தில் தயாா்செய்து பொருத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இவற்றுக்கென ராட்சத கிரேன் உள்ளிட்ட நவீன சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை அகலப்படுத்தும் பணிக்காக பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.
இதில், மொத்தம் 83 ராட்சத தூண்களில் 73 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல தூண்களின் மீது பொருத்தப்படும் பாலப்பகுதி (செக்மெண்ட்) மொத்தம் 75 பிரிவுகளாக தனித்தனியாக தயாா்செய்து அவற்றை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தமுள்ள 75 செக்மெண்டில் இதுவரை 28 செக்மெண்ட்கள் பொருத்தப்பட்டு பாலம் பிரம்மாண்ட காட்சியளிக்கிறது.
டிசம்பரில் இரட்டை பாலப் பணி: இப்பகுதியில் அமைந்துள்ள இரட்டைப் பாலத்தை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன், ஏற்கெனவே உள்ள இரட்டைப் பாலத்தை உடைத்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் டிசம்பரில் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள டிரம்கள்.
இதைத் தொடா்ந்து, அணுகுசாலைகள் மற்றும் அவற்றில் சிறுபாலங்கள், பாலத்தை இணைக்கும் வகையிலான 6 வழிச்சாலை பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
தொப்பூா் கணவாயில் நடைபெற்று வரும் உயா்நிலை பாலத்துடன் கூடிய சாலைப் பணிகளில் இதுவரை சுமாா் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

