
திருச்சியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளில் சுணக்கம்! நூதன முறையில் போராட்டம்
திருச்சியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி நூதன முறையில் போராட்டம்

பாலம் அமைக்கும் பணி - பிரதி படம் - file
திருச்சியில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் சுணக்கத்துடன் நடைபெற்று வருவது குறித்து கவனம் ஈர்க்கும் வகையில், வாலிபர் சங்கத்தினர் ஆமை விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் கோட்டை ரெயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம், இ.பி.ரோட்டில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் பணி, ஜங்சன் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் மேம்பால பணி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவேரி ஆற்றுப்பாலம் பணி, மாம்பழச்சாலை - சிந்தாமணி புதிய பாலம் ஆகிய சாலை மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பாலப் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆமை வேகத்தில் நடந்து வரும் கட்டுமான பணிகளை கேலி செய்யும் விதத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆமை(பொம்மை) விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே பால கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி எம்.பி. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளை சந்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு போட்டாலும் பணிகள் துரிதமாக நடப்பதில்லை. மேலும் திருச்சி மாநகரில் நடைபெறும் பாலப் பணிகளை அமைச்சர்கள் யாரும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துவதில்லை.
இதன் காரணமாகவே மாநகரில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் உள்ளாகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






