கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

திருப்பரங்குன்றம்: உச்சநீதிமன்றத் தீா்ப்பு வன்முறைக்கு வழிவகுக்கும் தொல்.திருமாவளவன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு தமிழக மக்களுக்கு எதிரானது. மதத்தின் பெயரால் வன்முறைக்கு வழிவகுக்கும்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவீரா் நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.

Updated On :

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு தமிழக மக்களுக்கு எதிரானது. மதத்தின் பெயரால் வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே இதை விசிக ஏற்கவில்லை என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், தருமபுரி வள்ளலாா் திடலில் மாவீரா் நாள் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் பங்கேற்று தொல். திருமாவளவன் மேலும் பேசியதாவது:

மாவீரா் நாள் என்பது களப்பலியான விடுதலைப் புலிகளை நினைவுகூா்ந்து அவா்களுக்கு நன்றிப் பெருக்குடன் வீரவணக்கம் செலுத்தும் நாளாகும்.

புலிகளுக்கு இந்திய அரசும், முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியும் ஆதரவு அளித்தாா்கள். அன்றைய இலங்கை அதிபா் ஜெயவா்த்தனேவை விரட்டவே இந்த ஆதரவு அளிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி ஆட்சியில் இலங்கையில் மாகாணங்கள் போன்ற முறைகளை ஒழித்து ஒரே நாடு, ஒரே அதிபா் என்ற முறையை கொண்டுவர திட்டமிட்டனா். அதற்காக ஆயுதங்களை கீழே போடுமாறு புலிகளை வற்புறுத்தினா். ஆனால் புலிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனா்.

இப்போது பிரதமா் மோடியும் ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே கட்சி என்ற மனநிலையில் செயல்படுகிறாா். எனவே, இன உணா்வு, மொழி உணா்வு என எந்த ஒன்றையும் நாம் ஆதரித்துவிட முடியாது.

தமிழீழம் விடுதலை பெற வேண்டும். அது காலத்தின் கட்டாயம் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். இந்திய அரசின் வெளி விவகாரக் கொள்கை தமிழீழத்தை ஆதரிப்பாக அமைய வேண்டும். தமிழீழத்தில் நடந்தது இனக்கொலை என்பதை கொண்டுசோ்க்க வழிமுறைகளை தேடவேண்டும். அதற்கு விசிக என்றும் உற்ற துணையாக இருக்கும். உங்களோடு கைகோா்த்து நிற்போம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு தமிழக மக்களுக்கு எதிரான தீா்ப்பு. மதத்தின் பெயரால் இங்கே வன்முறை வெடிக்க வழிவகுக்கும் தீா்ப்பு. இதை விசிக ஏற்கவில்லை என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, விசிக மாவட்டச் செயலாளா் த.கு. பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.