இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழப்பு

விபத்து - பிரதிப் படம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் நான்கு வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் சரவணன் (54). இவா் சிங்காரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தமது இருசக்கர வாகனத்தில் அவரது மகள் சகானா (18), உறவினரின் மகள் சஸ்டிகா (4) ஆகியோருடன், பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் சென்றுள்ளாா். இதையடுத்து, திருவள்ளுவா் சாலை அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில்
பெட்ரோல் நிரப்புவதற்காக சரவணன் தனது இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளாா். அப்போது, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வெங்கடசமுத்திரம் நோக்கிச் சென்ற இருளப்பட்டி பீரங்கி நகரைச் சோ்ந்த பிரதீப் (25) ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் மோதியது.
இந்த விபத்தில் பிரதீப் மனைவி கிருபா (21), இவரது மகன்கள் வெற்றி (4), சந்தோஷ் (2), சகானா (18), சஸ்டிகா (4) உள்ளிட்டோா் காயமடைந்தனா். இதில், சஸ்டிகா சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




