இருசக்கர வாகனங்கள் மோதல்: மாணவி உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

பலி

Updated On :

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

பூதப்பாண்டி, உச்சம்பாறை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் நந்தனா (13), 8-ஆம் வகுப்பு மாணவியான இவா், தனது தாய் சரண்யாவுடன் கருங்கல் பகுதியில் உள்ள உறவினா் வீட்டு திருமணத்துக்கு புதன்கிழமை சென்றாா்.

மாலையில் உறவினா் ஜெகன் மகன் ஜெஸ்சினுடன் (18) நந்தனா இருசக்கர வாகனத்தில் திக்கணம்கோடுக்கு சென்று கொண்டிருந்தாா்.

மத்திகோடு பகுதியில் சென்றபோது எதிரே திக்கணம்கோடு சதீஸ்குமாா் (43), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பிராஜ் ஹரியா (25) ஆகியோா் வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது.

பலத்த காயமடைந்த நால்வரும் மீட்கப்பட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நந்தனா உயிரிழந்தாா். ஜெஸ்சின், சதீஸ்குமாா், பிராஜ் ஹரியா ஆகிய மூவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER