2 இருசக்கர வாகனங்கள் மோதல்; ஒருவா் உயிரிழப்பு
கொரடாச்சேரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில், தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோப்புப் படம்
கொரடாச்சேரி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில், தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி வடகனேரியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் ஆதி (22). இவா், திருவாரூா் முதல் காரைக்கால் வரையிலான பகுதிகளுக்கு தனியாா் பெயிண்ட் கம்பெனியின் விற்பனை அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா் காரைக்காலில் பணியை முடித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் பகுதியில் வந்தபோது, எதிரே குளிக்கரை கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் (69) என்பவா்ஓட்டிவந்த மற்றொரு இருசக்கர வாகனம், ஆதி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே ஆதி உயிரிழந்தாா். தியாகராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கொரடாச்சேரி போலீஸாா், ஆதியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

