
பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்ஸோ பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் நாயக்கன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ம.கேசவன் (35). இவா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளாா்.
இந்நிலையில், அண்மையில் மாணவியின் பெற்றோா் வீட்டில் இல்லாததை அறிந்து, அவரது வீட்டிற்கு சென்ற கேசவன் மாணவிக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த பெற்றோா் தருமபுரி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, கேசவன் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை இரவு அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



