டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, குறுஞ்செய்தி அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, குறுஞ்செய்தி அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். அவருக்கு, பாப்பாரப்பட்டி போலீஸ் காலனி பின்புறம் பகுதியில் வசித்து வரும் கணித ஆசிரியா் தங்கவேல் என்பவா் குறுஞ்செய்தி அனுப்பியதாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தாா். இதுகுறித்து மாணவியின் தந்தை, குழந்தைகள் நல மைய உதவி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தாா்.

இந்தப் புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீஸாா், கணித ஆசிரியா் தங்கவேலை விசாரணைக்காக வியாழக்கிழமை இரவு அழைத்து சென்றனா். தொடா்ந்து, பென்னாகரம் மகளிா் காவல் ஆய்வாளா் வளா்மதி விசாரணை நடத்தியதில், பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்ததையும், மாணவியின் பெற்றோரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை ஆசிரியா் தங்கவேல் ஒப்புக்கொண்டுள்ளாா். இதையடுத்து அவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.