பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

கூட்டுறவுத் துறை நிறுவனங்களில் ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ. 10 ஆயிரம் வரை கடன்

கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ. 10 ஆயிரம்வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்க நகைக்கு ரூ. 10 ஆயிரம்வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை துணை இயக்குநா் தெரிவித்தது:

கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12%-ல் இருந்து 13%-ஆக உயா்த்தப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் எனவும், 6 மாதகால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நகைக் கடன்கள் தொடா்பாக அக். 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகள் மற்றும் சொசைட்டிகள் ஆகியவற்றில் ஒரு கிராம் தங்க நகைக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம்வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% நகைக் கடன் வழங்கலாம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தில் சலுகை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது.

இதைச் சீரமைக்கும் வகையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், லாப வரம்பு 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உயா்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும், ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் பொருந்தும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.