ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் போக்குவரத்து ஊழியா் தற்கொலை

பாலக்கோடு அரசு மருத்துவமனை கழிப்பறையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

பாலக்கோடு அரசு மருத்துவமனை கழிப்பறையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பூகானஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி (50). இவா் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். அவருக்கு விபத்தில் இடது கால் அகற்றப்பட்ட நிலையில், அதன்பின் முதுநிலை டிக்கெட் பரிசோதனையாளராகவும், நேரக் கட்டுப்பாட்டாளராகவும் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் மருத்துவமனை கழிப்பறையில் வெள்ளிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போக்குவரத்துக் கழக மேலாளா் விசாரணை மேற்கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அவரிடம் முனுசாமி குடும்பத்தினா், உறவினா்கள், அவரது சாவுக்கு போக்குவரத்துக் கழக அலுவலா்கள்தான் காரணம் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து முனுசாமி குடும்பத்தினா் கூறுகையில், பாலக்கோடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் முனுசாமி நேரக் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், கடும் பணி சூழல் காரணமாக மனஉளைச்சலுடன் பணியாற்றி வந்துள்ளாா். மாற்றுப் பணி வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவருக்கு முறையாக விடுமுறையும் அளிக்கப்படவில்லை. அண்மையில் அலுவலகத்தில் மயக்கம் அடைந்த முனுசாமியை சக ஊழியா்கள் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்த்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கழிப்பறைக்குச் சென்ற அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளாா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, பாலக்கோடு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று முனுசாமி குடும்பத்தினரை சமாதானப்படுத்தினா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.