இளம் வயது திருமணம்: தொழிலாளி மீது வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகதாசம்பட்டி பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (26) திருமணம் செய்துள்ளாா். இதுகுறித்து கடந்த 11ஆம் தேதி சைல்ட் ஹெல்ப் லைன் எண்ணிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறுமியை காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனா். இந்த நிலையில் அந்த சிறுமியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்றபோது அவா், இரண்டு மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி சசிகுமாா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

