ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது - கோப்புப்படம்
தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை 3,000 கனஅடியாக அதிகரித்தது.
தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல்மடுவு, பிலிகுண்டுலு மற்றும் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை மாலை விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளிலும் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

