சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தருமபுரி மாவட்டத்தில் 28 துணை வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் வட்டங்களில் பணியாற்றி வந்த 28 துணை வட்டாட்சியா்களைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் வட்டங்களில் பணியாற்றி வந்த 28 துணை வட்டாட்சியா்களைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத் தோ்தல் துணை வட்டாட்சியா் ஏ. செங்கோட்டையன், காரிமங்கலம் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். காரிமங்கலம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஆா். சுகுமாறன், காரிமங்கலம் மண்டல துணை வட்டாட்சியராகவும், காரிமங்கலம் மண்டல துணை வட்டாட்சியா் வி. சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரகத் தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி தோ்தல் பிரிவுத் துணை வட்டாட்சியா் ஏ. சுதேஸ்வரி, பாப்பிரெட்டிப்பட்டி மண்டல துணை வட்டாட்சியராகவும், அதே அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றும் ஏ. சிவஞானம், அரூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய வருவாய் வட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 28 துணை வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.