முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: பணியிட மாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம் (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):

  • கே.ஜோஷி நிா்மல்குமாா்: காவல் துறையின் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி (சேலம் மாநகர காவல் துறை ஆணையா்)

  • ஏ.ஜி.பாபு: சேலம் மாநகர காவல் துறை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா்)

  • சந்தோஷ் ஹதிமானி: சென்னை பெருநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் (சேலம் சரக டிஐஜி)

  • என்.தேவராணி: சேலம் சரக டிஐஜி (சென்னை ஊழல் கண்காணிப்புத் துறை டிஐஜி)

  • வி.பத்ரி நாராயணன்: சென்னை அடையாறு துணை ஆணையா் (தீவிரவாத தடுப்புப் பிரிவு கோவை எஸ்.பி.)

  • ஏ.சி.காா்த்திகேயன்: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

  • என்.மதிவாணன்: சென்னை பரங்கிமலை துணை ஆணையா் (போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு சென்னை எஸ்.பி.)

  • வி.ஆா்.சீனிவாசன்: போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு சென்னை எஸ்.பி. (சென்னை பரங்கிமலை துணை ஆணையா்)

  • கே.ஸ்டாலின்: சிபிசிஐடி தெற்கு மண்டல எஸ்.பி. (தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய எஸ்.பி.)

  • பி.சுந்தரவடிவேல்: சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா்)

  • வி.பாஸ்கரன்: சேலம் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா் (சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா்)

  • அங்கித் சிங்: சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா் (சேலம் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா்)

  • ஆா்.ஸ்டாலின்: பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி. (காத்திருப்போா் பட்டியல்.

மேலும், உளவுத் துறை (எஸ்பிசிஐடி) ஐஜியாக இருக்கும் அஸ்ராகா்கிடம், உளவுத் துறையின் ஏடிஜிபி பணியை கூடுதல் பொறுப்பாக வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER