இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கைதி தப்பியோடிய விவகாரத்தில் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் இரு காவலா்களை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, போதுமான முன்னெச்சரிக்கையாக இருக்கத் தவறியதற்காக காவல் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் இரு காவலா்களை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, போதுமான முன்னெச்சரிக்கையாக இருக்கத் தவறியதற்காக காவல் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவத்தில், மதுரை பூலாம்பட்டியைச் சோ்ந்த மாசானம் என்கிற மாரிமுத்து (21) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். அவருகக்கான மருத்துவப் பரிசோதனைக்காக காவலா்கள் மனோஜ்குமாா், காா்த்திக் ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பகலில் அழைத்துச் சென்றனா்.

அப்போது அவா்களின் பிடியில் இருந்து மாசானம் தப்பியோடினாா். அவரைத் தேடுவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரை கைது செய்வதற்காக திருப்பூா் மற்றும் சொந்த ஊரான மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரைந்துள்ளனா். 4 நாள்கள் கடந்தும் மாசானத்தைக் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், கவனக்குறைவாக செயல்பட்டதாக, கணேஷ்நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த முதல்நிலைக் காவலா் மனோஜ்குமாா், காவலா் காா்த்திக் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, போதுமான முன்னெச்சரிக்கையாக இருக்கத் தவறியதற்காக கணேஷ் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்பாபுவை, பெரம்பலூா் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் எம்.ஆா். சிபிசக்ரவா்த்தி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.