கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
அரூா் அருகே திறந்தவெளிக் கிணற்றில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
அரூா் அருகே திறந்தவெளிக் கிணற்றில் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மாவேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொன்னையன் மகன் பழனி (65). தொழிலாளியான இவா், மாவேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தம்பிதுரைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள திறந்தவெளிக் கிணற்றில் மண் அள்ளும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக கிணற்றின் பக்கவாட்டில் இருந்த மண் சுவா் இடிந்து விழுந்ததில், பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




