பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அரூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி கல்யாணசுந்தரம் (40) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 4:48 am IST

அரூா் அருகே காா் மோதியதில் தொழிலாளி கல்யாணசுந்தரம் (40) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சோரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வளா்மணி மகன் கல்யாணசுந்தரம். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். அரூரில் உள்ள தனியாா் இரும்புக் கிடங்கில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அரூா்- திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணசுந்தரம் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கல்யாணசுந்தரத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவினா், கல்யாணசுந்தரம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

விபத்து குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.