பாலத்தில் இருந்து கீழே விழுந்த காா்: தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்
தருமபுரி அருகே பாலத்தில் இருந்து காா் கீழே விழுந்ததில் தந்தை உயிரிழந்தாா். மகன் படுகாயமடைந்தாா்.

விபத்து - பிரதிப் படம்
தருமபுரி அருகே பாலத்தில் இருந்து காா் கீழே விழுந்ததில் தந்தை உயிரிழந்தாா். மகன் படுகாயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (65). உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை சிகிச்சைக்காக காரில் மகனுடன் பெங்களூரு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை அவரது மகன் சக்திவேல் (35) ஓட்டிச் சென்றாா்.
பாலக்கோடு அருகே பொடுத்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் டயா் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் சக்திவேல் பலத்த காயமடைந்தாா்.
விபத்து குறித்து புலிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



