தளி ஒன்றியத்தில் சாலைப் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தளி ஒன்றியத்தில் ரூ.80 லட்சத்தில் தார்ச் சாலைகள், சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை இ.ஜி.சுகவனம் எம்.பி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.


கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தளி ஒன்றியத்தில் ரூ.80 லட்சத்தில் தார்ச் சாலைகள், சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை இ.ஜி.சுகவனம் எம்.பி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
கெம்பட்டி ஊராட்சி கர்னூரிலிருந்து கோடிபள்ளி கிராமம் வரை ரூ.25 லட்சத்தில் தார்ச் சாலை, மதகொண்டப்பள்ளி சாத்தனூர் சாலை முதல் பெரிய மதகொண்டப்பள்ளி வரை ரூ.9.50 லட்சத்தில் தார்ச் சாலை, தேவர் பேட்டாவிலிருந்து பசவனபுரம் வரை ரூ.10 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 36 சாலைகள் ரூ.80 லட்சத்தில் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தளி ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெயஸ்ரீ சந்திரப்பா தலைமை வகித்தார். தளி ஒன்றிய திமுக செயலர் பிரகாஷ், அவைத் தலைவர் சீனிவாச ரெட்டி முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், மோகேந்திரபிரசாத், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...