கிருஷ்ணகிரியை அடுத்துள்ள அக்ராஹரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வியாழக்கிழமை வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை கிருஷ்ணகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.சம்பத் தொடக்கிவைத்தார். இதில், அக்ரஹாரம் மற்றும் பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி இனத்தை சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தன்னம்பிக்கை, மன தைரியம், நேர்மறையான சிந்தனைகள், பகுத்தறியும் திறன், குறிக்கோள், ஊக்கம் மற்றும் நல்வாழ்வு, தியானம், யோகா ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கருத்தாளர்கள் கீலகன், மெல்பா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.