வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நீச்சல் குள உயிர் காப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் குள உயிர் காப்பாளர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் குள உயிர் காப்பாளர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிற்சியில் நீர்நிலைகள், நீச்சல்குளம், இதர விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்பைத் தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நீச்சல் குள உயிர் காப்பாளர்கள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நீச்சல் குள உயிர் காப்பாளர்கள் 42 பேர் பங்கேற்றுள்ளனர். ராஜா, செபஸ்டியன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான

இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கிருஷ்ணகிரி வட்டார வளமையத்தில் நடைபெற்ற மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே.தமிழரசு குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். இந்த முகாமில் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர் நடத்தினர். இதில் காதொலிக் கருவி பெற - 15 பேர், அறுவைச் சிகிச்சைக்கு 7 பேர், சிறப்பு காலணிக்கு 5 பேர், சக்கர நாற்காலிக்கு 13 பேர் என மொத்தம் 44 பேர் உதவி உபகரணங்கள் பெற பரிந்துரை செய்யப்பட்டனர்.

மேலும், 33 மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை, 23 பேருக்கு பேருந்துக் கட்டண சலுகை, 18 மாணவர்களுக்கு ரயில் இலவசப் பயண அடையாள அட்டை, 58 பேருக்கு கல்வி உதவித்தொகை, 47 மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி, 32 பேர் வாழ்வியல் திறன் பயிற்சி வழங்க பரிந்துரை செய்யப்பட்டனர்.

முகாமில் 200 மாற்றுத்திறன் மாணவர்கள், 150 பெற்றோர் என 350 பேர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய சிறப்பாசிரியர்கள் அருண்குமார், ரமேஷ், முருகன், கித்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.