வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

சாத்தான்குளம் அருகே பெண் வெட்டிக் கொலை, கணவர், மகன் காயம், இரண்டு மகள்கள் கடத்தல்

சாத்தான்குளம் அருகே வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டியதில் பெண் பலியானது குறித்து...

Woman killed, husband and son injured near Sathankulam, two girls missing 

சாத்தான்குளம் அருகே பெண் பெண் வெட்டிக் கொலை - கோப்புப்படம்

Updated On :

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே முதலூரில் ஒரு வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை, ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூர் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்த தம்பதியினருக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14) மற்றும் பிளெசெட் ராஜா (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் பலியானார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமிகள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கவும், கொலையாளிகளை பிடிப்பதற்கும் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது குடும்பத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

A woman was allegedly killed after unidentified persons broke into a house and attacked a family at Mudalur near Sathankulam in the early hours of Friday, officials said. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER