
குளிர்பதனப் பெட்டியில் பெண் தலை; துண்டிக்கப்பட்ட கைவிரல்கள்! கொலைகாரக் கணவர் கைது!
குளிர்பதனப் பெட்டியில் பெண் தலை, துண்டிக்கப்பட்ட கைவிரல்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.

குளிர்பதனப் பெட்டியில் பெண் தலை - File photo
அஸ்ஸாம் மாநிலத்தில், திருமணமான பெண் கொலை செய்யப்பட்டு, அவரது தலை குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொலையில் அவரது கணவர் கைதாகியிருக்கிறார்.
குவகாத்தியின் பசிஸ்தபுரா பகுதியைச் சேர்ந்த ரியா தலுக்தர் என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், கொலைச் சம்பவம் மிகக் கொடூரமாக நடந்துள்ளது, பெண்ணின் தலை பாலிதீன் பையில் சுற்றப்பட்டு குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
கைதாகியிருக்கும் அவரது கணவர் ராமானுஜன் கோஸ்வாமி, கொலையை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சுமார் 48 மணி நேரத்துக்கு முன்பு கொலை நடந்திருப்பதாகவும், ஆறு மாததங்களுக்கு முன்புதான் ரியா - ராமானுஜத்துக்கு திருமணமாகி, அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டு, பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ராமானுஜத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
Assam Woman head fridge severed fingers - husband arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






