ஒசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் சாவு
ஒசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் திங்கள்கிழமை 4 பேர் உயிரிழந்தனர்.ஒசூர் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் இருசக்கர வாகனம் தயாரிக்கு
ஒசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் திங்கள்கிழமை 4 பேர் உயிரிழந்தனர்.
ஒசூர் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் முன் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்
திங்கள்கிழமை தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இளைஞர் தூங்கிக் கொண்டிருந்தது தெரியாமல், ஒசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ் (43) லாரியை எடுத்துள்ளார். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். இறந்தவரின் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மத்திகிரி போலீஸார் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சிகாதுல்லா (50). கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை
செய்து வந்தார். திங்கள்கிழமை பேரண்டப்பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அவ் வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகாதுல்லா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அட்கோ போலீஸார் வழக்குப் பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் சக்திராமுலு நாயுடு (50). இவர் தனது பேரன் மாதேஷை (15),அழைத்து கொண்டு ஒசூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில்
மூக்கண்டப்பள்ளி அருகே வந்தபோது அவ் வழியே சென்ற தனியார் பேருந்து இவருடைய இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி மாதேஷ் சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மாதேஷ் மீது ஏறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சக்திராமுலு நாயுடு படுகாயத்துடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி முனியப்பன் (55).
இவர் மூக்கண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களூரு நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இந்த இரு வழக்குகள் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

