எம்ஜீஎம் பள்ளிக் குழும மாணவிகள் கல்விச் சுற்றுலா
போச்சம்பள்ளி எம்ஜீம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியின் 250 மாணவ மாணவிகள் கிருஷ்ணகிரியில் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் ஆவின் நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.
தபால் நிலைய அதிகாரி நாகராஜ் மாணவர்களை வரவேற்று கார்டு, தபால் தலை விற்பனைப் பகுதி, சிறுசேமிப்பு பகுதி, தபால்கள் பிரிக்கப்படும் பகுதி, பார்சல் பகுதி, வெளிநாடுகளுக்கு தபால் அனுப்பும் பகுதி ஆகியவை செயல்படும் முறைகளை ஏனைய அலுவலர்களின் உதவியுடன் விளக்கினார்.மாணவர்கள் கார்டு மற்றும் இன்லேன்ட் கவர் வாங்கி அங்கேயே தனது உறவினர்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கடிதம் எழுதி அனுப்பினர்.
பிற்பகல், கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பால் கொள்முதலிருந்து அது பக்குவப்படுத்தப்பட்டு பொது விநியோகத்துக்கு பைகளில் நிரப்படும் வரையிலான நிகழ்வுகள் பற்றி அலுவலர்கள் செயல்முறை விளக்கினர்.
இதனைப்பற்றி பள்ளியில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளியின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
