அஞ்செட்டி அருகே 10-ஆவது முறையாக தரைமட்டப் பாலம் உடைந்தது

தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அருகே தொட்டல்லா ஆற்றில் உள்ள தரைமட்டப் பாலம் 10-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை இரவு அடித்துச் செல்லப்பட்டது.

தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அருகே தொட்டல்லா ஆற்றில் உள்ள தரைமட்டப் பாலம் 10-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை இரவு அடித்துச் செல்லப்பட்டது.
தேன்கனிக்கோட்டை வட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக 103 மி.மீட்டர் மழை பதிவானது. ஆகஸ்ட் மாதம் முதல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தொட்டல்லா ஆற்றில் உள்ள தரைமட்டப் பாலம் 10 முறையாக செவ்வாய்க்கிழமை இரவு உடைந்தது.
அதனால் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் சாலையில் முழுமையாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதில், அஞ்செட்டிப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் டிராக்டர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அர்த்தகூர் ஏரி நிரம்பி வழிந்த வெள்ள நீரில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிரில் உள்ள 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஒரே நாளில் தேன்கனிக்கோட்டையில் 103 மி.மீ மழை, ஒசூரில் 11 மி.மீ மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com