கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஒசூரில் இன்று 2,500 சிறுகுறு தொழிற்சாலைகள் மூடல்!

உடனடியாக  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒசூரில் உள்ள 2,500 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் வியாழக்கிழமை

Updated On :5 ஏப்ரல் 2018, 7:26 am IST

உடனடியாக  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒசூரில் உள்ள 2,500 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் வியாழக்கிழமை முழுமையாக இயங்காது என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
விவசாயத்தைக்  காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தமிழக காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி 15 மாவட்ட  விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பது மட்டுமின்றி தமிழக மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரை தமிழகம் பெற வேண்டியும் தமிழக அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை நடத்தும் முழு பந்துக்கு ஆதரவு  தெரிவித்தும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒசூரில் இயங்கி வரும் 2,500 தொழிற்சாலைகள் இயங்காது என அதில் தெரிவித்தார். 
முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர்  ஞானசேகரன், செயலாளர் பத்மநாபன், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர்கள்சுப்பிரமணி,  கெஞ்சப்பா, முருகன், இணைச் செயலாளர்கள் குமரவேல், குமணன், பைரப்பா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.