ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர், மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் ஸ்ரீ பெருமாள் திருமஹால் கலையரங்கத்தில் கடந்த மார்ச் 30, 31 ஆகிய இரு நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த மூன்றாமாண்டு மாணவர் கே. மெளனிஸ்வரன் தங்கப் பதக்கம் பெற்றார். மாணவருக்கு அவரது கல்லூரி நிறுவனர் வே. சந்திரசேகரன், கல்லூரி செயலர் கு. செங்கோடன், கல்லூரி முதல்வர் முனைவர் க. அருள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ந. திருமூர்த்தி, லட்சுமணன், சுரேஷ்பாபு மற்றும் சத்யா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

00:00! மிக அதிக கருத்துகளைப் பெற்ற பிறந்த நாள் பதிவு!

நேரம் 00:00 என்பதற்கு அர்த்தம் என்ன? த்ரிஷா பதிவு வைரல்

காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என நினைத்தால்... உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


