உலக நன்மை வேண்டி ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் நவ சண்டி யாகம்
ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உலக நலனுக்காக ஞாயிற்றுக்கிழமை மகா நவ சண்டி யாகம் நடைபெற்றது.
ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உலக நலனுக்காக ஞாயிற்றுக்கிழமை மகா நவ சண்டி யாகம் நடைபெற்றது.
23-ஆவது ஆண்டாக நடைபெறும் யாக நிகழ்ச்சிகள் ஆக.3-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம். கலச ஸ்தாபனம், கலச பூஜை ஆகிய நிகழ்ச்சிகளுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
2-ஆவது நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை கலச பூஜை, ருத்ர ஹோமம், முதற்கால மற்றும் இரண்டாம் கால நவ சண்டியாகம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி, மூன்றாம் கால நவ சண்டியாகம், மகா சங்கல்பம், வடுக பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை ஆகியவையும் பின்னர், நவ சண்டியாக விளக்கவுரை நடைபெற்றது. மகா தீபாராதனைக்கு பின்னர், விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் ஸ்ரீசக்கரத்திற்கு கலச பூஜை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, கோயில் செயல் அலுவலர் ராஜரத்தினம், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், பாஜக மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயலாளர் ராஜி, கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயதேவன், சுந்தர்ராஜ் மற்றும் தொழிலதிபர் பவானி சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நவ சண்டி யாகத்தை காஞ்சிபுரம் அருகே கூவத்தை சேர்ந்த மூர்த்தி குருக்கள், ஒசூர் மலைக்கோயில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழா நடைபெற்ற 3 நாள்களும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசூர் மற்றும் தேர்பேட்டை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

