சுதந்திர தின விழாவையொட்டி, ராயக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்பரேஷன், வனத் துறை, தினமணி ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கு இலவச மரக் கன்றுகளை வழங்கின.
சுற்றுச்சூழலைச் பாதுகாக்க வலியுறுத்தியும், உலகம் வெப்பம் அடைவதைத் தடுக்கும் வகையிலும் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் உள்ள ஆர்.என்.கே. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு அந்த நிலையத்தின் உரிமையாளர் ஆர்.டி. ராஜசேகர் தலைமை வகித்து விவசாயிகளுக்கு இலவச மரக் கன்றுகளை வழங்கினார். விவசாயிகளுக்கு தேக்கு, சில்வர் ஓக், வேப்பம் போன்ற மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. ராயக்கோட்டை வனச்சரகர் பாபு, ஆர்.என்.கே. பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஆர்.கே.தியாகராஜன், பணியாளர்கள், தினமணி முகவர் வி. முனிராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.