இயற்கை இடர்பாடுகளால் சிக்கியுள்ள கேரளத்துக்கு உதவுமாறு பொதுமக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரளத்தில் மழை, நிலச் சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளில் சிக்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகளைப் பெற்று கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இடர்பாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், வணிக சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள், நலச் சங்கங்கள் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி, உணவு, உடை மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான வகையில் பொருள்களை உதவுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 26) - கடகத்துக்கு சிக்கல் தீரும்!

இன்றைய ராசி பலன்கள் (26.7.2026) 12 ராசிகளுக்கும்! வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


