
அதியமான் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறையில்
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் மாநில அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் மாணவி அக்ஷய நிவாஷினி வரவேற்றார். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் முன்னிலை வகித்து, தொழில்நுட்பக் கல்வியின் அவசியம் குறித்தும், பயன்பாடு குறித்தும் பேசினார். அதியமான் கல்வி குழுமத்தின் செயலர் ஜெ .மே.ஷோபா, கணினியின் முக்கியத்துவம் குறித்து வாழ்த்துரை வழங்கினார்.
அதியமான் கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், கல்லூரி முதல்வர் தா.இரா.கணேசன் ஆகியோர் இன்றைய கால கட்டத்தில் கணினியின் அவசியம் குறித்து பேசினர்.
கணினித் துறைத்தலைவர் வனஜா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை கிளையண்ட் லினக்ஸ் (எஸ்.எ.பி) மென்பொருள் பிரைவேட் லிமிடெட் திட்ட மேலாளர் ர.ர.சுரேஷ் தகவல் தொழில் நுட்பத் துறையில் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் மின்னியல் ஒளிபரப்பியல் மூலமாக கலந்துரையாடல் நடத்தினார். இறுதியாக மாணவி நாபியாதபஸும் நன்றி கூறினார்.
இரண்டாம் அமர்வில் மாணவி சங்கீதா வரவேற்றார். இக்கருத்தரங்கில் ஏலகிரி டான் போஸ்கோ கல்லூரி, ஒசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரூர் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, ஊத்தங்கரை யூனிக் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒசூர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற கல்லூரிகளில் இருந்து மாணவிகள் கலந்துகொண்டு காகித விளக்கக் காட்சி, பிழைத் திருத்தம், சந்தைப்படுத்துதல் மற்றும் விநாடி வினா போன்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி செயலர் மற்றும் முதல்வர் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினர். இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறை மாணவி ரேவதி நன்றி கூறினர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





