‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

பர்கூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

பர்கூரில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணியில் இருந்த காவலாளியுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பர்கூரில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணியில் இருந்த காவலாளியுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள ஒரு ஏடிஎம்  மையத்தில், அங்கிநாயனப்பள்ளியைச் சேர்ந்த சிதம்பரம்(27) என்பவர் காவல் பணியில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இருந்தார்.
அப்போது, அவரது கூட்டாளிகளான திருப்பூரைச் சேர்ந்த சகோதர்கள் விஜயகுமார் (28), வினோத்குமார்(25), சேலம், பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த சூரியா (எ) இளஞ்சூரியன் (22), பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) சக்திவேல் (25) ஆகியோர் இணைந்து ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனர். 
இந்த முயற்சி, தோல்வி அடைந்த நிலையில் வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், காவலாளி சிதம்பரம், கூட்டாளிகளுடன் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பர்கூர் போலீஸார், காவலாளி சிதம்பரத்தையும், அவர் கொடுத்த தகவலின்பேரில் விஜயகுமார், வினோத்குமார், இளஞ்சூரியன், சக்திவேல் ஆகியோரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
மேலும், கொள்ளையடிக்க பயன்படுத்திய கேஸ் வெல்டிங் இயந்திரம், கடப்பாரை,  கத்தி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.