
பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாரத் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தையும், மாணவ, மாணவிகள் அளித்த வெள்ள நிவாரணத் தொகையும் சேர்த்து ரூ. 10 லட்சம் மதிப்பில் துணி வகைகள், மளிகைப் பொருள்கள், மருந்துகள், உணவு பொருள்கள், பாக்கெட், தட்டுகள் போன்றவை கேரள மாநிலத்துக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி, இயக்குநர் சந்தோஷ், பள்ளிகளின் முதல்வர்கள் நரேந்திரநாத் ரெட்டி, தமிழரசன், துணை முதல்வர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






