திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கிருஷ்ணகிரி பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழா

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை (ஜூலை 23)தொடங்குகிறது.

Updated On :23 ஜூலை 2018, 9:30 am IST

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை (ஜூலை 23)தொடங்குகிறது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அக்ரஹாரம் சிவாஜி நகரில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோயில் 82-ஆவது ஆண்டு சப்தா பிரமோத்ஸவ விழாவையொட்டி திங்கள்கிழமை காலை  கணபதி ஹோமம், நவக்கிர பூஜை, ஸ்ரீ விட்டல் ரகுமாயி, ஸ்ரீ அம்பா பவானி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை 7 மணிக்கு ஸ்ரீ விட்டல் ரகுமாயி உற்சவ மூர்த்தி கிராம ஊர்வலம் நடைபெறுகிறது.
ஜூலை 24 முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ விட்டல் ரகுமாயி, ஸ்ரீ அம்பா பவானி அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. 27-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அம்பா பவானி தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு விநாயகர், ஸ்ரீ விட்டல் ரகுமாயி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 
ஜூலை 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ருக்மணி திருக்கல்யாணம், மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்கார தேரில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ விட்டல் ரகுமாயி, ஸ்ரீ அம்பா பவானி உற்சவ மூர்த்திகள் நகர் வலம் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை ஸ்ரீ அம்பா பவானி அபிஷேக ஆராதனையும், மாலை 5 மணிக்கு வசந்த உற்சவமும் நடைபெறுகிறது. 
விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.