கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் மனு அளிக்க வந்த பெண்கள்

குடிநீர் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் காலி குடங்களுடன் பெண்கள் மனு அளிக்க வந்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

குடிநீர் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் காலி குடங்களுடன் பெண்கள் மனு அளிக்க வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் குறைதீர் கூட்டம், ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே உள்ளகுள்ளம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவின் விவரம்: எங்கள் கிராமத்தில் 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட நீர் வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை.
தற்போது, பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். அந்த தண்ணீர் உப்பாகவும் பயன்படுத்த இயலாத நிலையிலும் உள்ளது. அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி 4 மாதங்கள் ஆகின்றது. பழுது நீக்குவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட மின் மோட்டார் இதுவரை பொருத்தப்படவில்லை.  மேலும், எங்கள் குடியிருப்புக்குச் சென்று வருவதற்கு சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.