போட்டித் தேர்வுகளை சிக்கலின்றி மாணவர்கள் எதிர்கொள்ள நடவடிக்கை தேவை
போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சிக்கலின்றி எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சிக்கலின்றி எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட மற்றும் ஆதாரக் கிளைகள் ஒருங்கிணைந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஓய்வூ பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெகநாதன், செயலர் மாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசாணைப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயம் செய்து தரக் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு நிலுவை வழங்காமல், காலதாமதம் செய்யாமல் அரசு கருவூலக நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...