செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விசைப்பம்பு இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் குடிநீர் பணியாளர்கள், விசைப்பம்பு இயக்குநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :14 மே 2018, 9:19 pm

கிருஷ்ணகிரியில் குடிநீர் பணியாளர்கள், விசைப்பம்பு இயக்குநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே, தமிழ்நாடு குடிநீர் பணியாளர்கள், விசைப்பம்பு இயக்குநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசியின் மாவட்டத் தலைவர் டி.ராமசந்திரன் தலைமை வகித்தார்.
கட்டுமானப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் நஞ்சப்பா, மாவட்ட துணைச் செயலர் தூதட்டியப்பா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சேகர், மாநிலக் குழு உறுப்பினர் பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிநீர் விசைப்பம்பு இயக்குநர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற குடிநீர் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.