மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முருக்கம்பள்ளம் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

பர்கூர் அருகே உள்ள முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மகாபாரத நிகழ்ச்சியில் துரியோதனன் படுகளம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 10:49 pm

பர்கூர் அருகே உள்ள முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மகாபாரத நிகழ்ச்சியில் துரியோதனன் படுகளம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரதத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா, மே 4-ஆம் தேதி கணபதி பூஜை, திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையில் 18 நாள்கள் மகாபாரத சொற்பொழிவும், மே 6 முதல் 13 நாள்கள் இரவு 9 மணிக்கு மகாபாரத தெருக்கூத்து நாடகமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் துரியோதனன், பீமன் இருவருக்கும் இடையேயான சன்டைக் காட்சிகள் இடம் பெற்றன. துரியோதனன் இறப்பது போலவும் கலைஞர்கள் நடத்துக் காட்டினர். இந்த நிகழ்ச்சியை முருகம்பள்ளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.