ஒசூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பிலான புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பூமி பூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை பணிகளைத் தொடக்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் பேசியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நகர பகுதிக்கு இணையாக கிராமங்களில் சாலை வசதி, குடிநீர்வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து, போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
அதனடிப்படையில் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட ஒசூர் மாலூர் சாலை முதல் கெம்பசந்திரம் பைரசந்திரம் வரை ரூ. 61.16 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும், நல்லூர் சாலை முதல் நல்லூர் அக்ராஹாரம் வரை ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும், ஒசூர் சாலை முதல் கக்கனூர் சொக்கநாதபுரம் வரை ரூ. 12.60 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும், ஒசூர் மாலூர் சாலை முதல் தாசேப்பள்ளி வரை ரூ. 12.31 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும், ஈச்சங்கூர் முதல் கூளிகானப்பள்ளி வரை ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும், ஒசூர் கக்கனூர் முதல் சொக்கநாதபுரம் வரை ரூ. 12. 60 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோல ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு சுகாதாராமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகள் குறித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் தீர்வு காணப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல்ராஜ், வட்டாட்சியர் முத்துபாண்டி, தனி வட்டாட்சியர் ரமேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


