முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சாலை விபத்தில் பிளஸ் 2 மாணவர் சாவு

ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:33 am IST

ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
ஒசூர் மத்தம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாஷிங்டன். இவரது மகன் ஹரிகரன் (18). இவர் ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில்  கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு உணவகம்  மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாணவர் மீது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலே மாணவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒசூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.