கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 23,133 பேர் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,850 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளதல் மற்றும் இடமாறுதல் செய்வதற்கான விண்ணப்பங்கள் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ பெறுதல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்தராவ் விஷ்ணுபாட்டீல் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியது:
இந்த முகாமில் இரண்டு முறை பதிவு சரிபார்த்தல், வாக்காளர் எண்ணிக்கை, வீடு தோறும் வாக்காளர் பட்டியல் உள்ளவாறு சரி செய்யப்பட்டுள்ளதா? வெளியூர் சென்றவர்கள் விவரம், சட்டப்பேரவைத் தொகுதியில் முகவரி மாற்றம் செய்வது குறித்து அந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை நடைபெற்ற முகாம்களில் படிவம் 6-ஐ 18,533 பேரும், படிவம் 7-ஐ 1,370 பேரும், படிவம் 8-ஐ 2,138 பேரும், படிவம் 8-ஏ ஐ 1,092 பேரும் என மொத்தம் 23,133 பேர் மனுக்களாக அளித்துள்ளனர். மேலும், இந்த முகாம், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அக்.14-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அக்டோபர் கடைசிவரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் உள்ள வாக்காளர் அலுவலர்களிடம் நேரில் வழங்கலாம் என்றார்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


