
கெலவரப்பள்ளி அணை பகுதியில் சுற்றித்திரியும் யானைகள்: வனத் துறை எச்சரிக்கை
ஒசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் 2 ஆண் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் 2 ஆண் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒசூரை அடுத்த அத்திமுகம், ஏ.செட்டிப்பள்ளி பகுதிகளில் சுற்றித்திரிந்த 2 யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை கெலவரப்பள்ளி அணைக்குச் சென்றன. அணையின் கரையோரத்தில் நீராடிய யானைகள், அங்குள்ள ஆகாயத்தாமரைகளைத் தின்றுவிட்டு அட்டூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரின் தக்காளி தோட்டத்துக்குள் புகுந்து செடிகளை துவம்சம் செய்தன. வனப்பகுதியில் நிலவும் வறட்சியே இதற்கு காரணம் என்றாலும், விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர்.
அணையில் யானைகள் நீராடுவதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் யானைகளின் அருகில் செல்ல வேண்டாமென்றும், அணை சுற்றி உள்ள ஆவலப்பள்ளி, நந்திமங்கலம், சித்தனப்கள்ளி, தட்டிகானப்பள்ளி, தேவசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





