அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 29 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

Nepal flood

நேபாள வெள்ளப் பெருக்கு - AP

Published On :29 ஆகஸ்ட் 2026, 10:13 pm IST

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 669-ஆக உயர்ந்துள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுபோன்ற சம்பவங்களில் 20 நாள்கள் கழித்து மீண்டு வந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள்: அமைச்சர் ராஜ்மோகன்

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரட்டுள்ளது.

முதல்வர் விஜய் பிரதமராகிறாரா என்ற கேள்விக்கு, அவர் முதலில் முதல்வர் பதவியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாத இறுதி வரை, நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு, எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டது.

இசட் பிரிவில் ஒரு நாளைக்கு சுழற்சி முறையில் 33 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தநிலையில், இனி எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

உசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பள்ளித் தலைமையாசிரியை விமலா கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்கள் செய்திகள் வலம் வருகின்றன.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நத்தம் அருகே ஆன்லைன் செயலி மூலம் சுமார் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த விவகாரத்தில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

குற்றவாளிகளுக்கு வாடகைக்கு வீடு கொடுத்ததால், தான் இன்னமும் பிரச்னைகளை சந்தித்து வருவதாக, அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் மேலாளர் கூறியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் சனிக்கிழமை (ஆக. 29) கேள்வி எழுப்பியுள்ளார்.

நேபாள வெள்ளத்தின்போது அங்கிருந்தது 103 தமிழர்கள் என்று இதுவரை தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், வெள்ளப்பெருக்கின்போது 400 தமிழர்கள் இருந்ததாக தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஏற்றி, மற்ற பாகங்களை பிரியாணி டபராவில் வேக வைத்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ பேச்சுக்கு முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக சனிக்கிழமை (ஆக. 29) தெரிவித்துள்ளது.

நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஈஷா அமைப்பின் பக்தர்கள் 77 பேரின் நிலைகுறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் இ-கேஓய்சி மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் எப்படி அடையாளம் காணப்படுகிறது? என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது பற்றி...

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, சத்தில்லாத வெறும் உணவுப் பொட்டலங்களில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு இருக்கிறது என்ற லேபிள் ஒட்டப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏதேனும் ஒரு டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலி அல்லது வங்கியின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றத்தை செய்வதற்கு முன் இரண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.