
தமிழ்நாடு
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கட்டடம்.
ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து: 16 நாள்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட மாணவர்கள்!
ஜார்க்கண்ட்டில் தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹதோ தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 18), விநாடிக்கு 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 12,174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு, இன்று(ஆக. 18) 3வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.
நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு என்று சொன்னவர் ராகுல்: காங்கிரஸ்
நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்று, ராகுல் காந்தி உறுதியளித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை வியக்கவைத்த இந்திய தேர்தல் முறை.. அதிபர் டிரம்ப்பின் பாராட்டுப் பதிவு!
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








