பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அதிக உப்பு, அதிக சர்க்கரை! விரைவில் ஜங்க் உணவுகளுக்கு எச்சரிக்கை லேபிள்!

அதிக உப்பு, அதிக சர்க்கரை இருக்கிறது என ஜங்க் உணவுகளுக்கு விரைவில் எச்சரிக்கை லேபிள் வருகிறது.

சர்க்கரை

சர்க்கரை - ANI

Published On :

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, சத்தில்லாத வெறும் உணவுப் பொட்டலங்களில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு இருக்கிறது என்ற லேபிள் ஒட்டப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுப் பொட்டலத்தின் முன் பக்கத்தில் சிவப்பு நிறத்தில், அறுகோண எச்சரிக்கை லேபிள் ஒட்டப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது இந்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

உணவுப் பொட்டலங்களின் முன்புறம் விவரங்களைக் குறிப்பிடுவது (FoPL) குறித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுக்குப் பதிலளிக்கும் விதமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் மூலம் எஃப்எஸ்எஸ்ஏஐ தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

சத்தில்லாத, அதிக உப்பு, சர்க்கரை சேர்த்து செய்யப்படும் ஜங்க் உணவுகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மிகவும் நல்லது, இல்லாவிட்டால் இதன் மீது நாங்கள் உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்படி ஒரு உணவுப் பொட்டலத்தில் எது அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறதோ அது குறித்து சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கை லேபிளில் அதிக கொழுப்பு, அதிக உப்பு, அதிக சர்க்கரை என பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒன்று, இந்த லேபிளை அச்சடித்து அதில் உணவுகளை விற்பனை செய்ய வேண்டும், இல்லையென்றால், உணவுப் பொருள்களின் உற்பத்தி முறையை மாற்றிக்கொள்ள தயாரிப்பு நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, குறிப்பிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ள தயாரிப்புகள் மீது கவனம் செலுத்துவது.

இரண்டாம் கட்டமானது, குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ள தயாரிப்புகளுக்கு எச்சரிக்கைகளை விடுத்து, அதனை ஒழுங்குபடுத்துவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

High salt, high sugar! Warning labels for junk foods coming soon!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.