FOLLOW US

ON GOOGLE DISCOVER

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினாலும் கழுத்துக்கு ஆபத்து நேரிடக் கூடாது என்றால்!

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினாலும் கழுத்துக்கு ஆபத்து நேரிடக் கூடாது என்றால்..

News image

செல்போன் பழக்கம் - Center-Center-Delhi

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST

தமிழ், மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷகிலா, சென்னையில் உள்ள மருத்துவமனையில் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்து தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினாலும் எந்த பாதிப்பும் நேரிடக் கூடாது என்பதே பலரது தேடலாக மாறியிருக்கிறது.

நடிப்பு, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அண்மைக் காலம் வரை அவர் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாகவும், அவர் தனியாக நடக்க முடியாமல், கைபிடித்தபடி செல்லும் புகைப்படங்களும் வெளியாகி, பல மணி நேரம் கையில் செல்போனுடன் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அதிர்ச்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், விடியோ வெளியிட்ட ஷகிலா, நான் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவேன். ஆன்லைன் விளையாட்டுகளை அதிகம் விரும்பி விளையாடுவேன். படுக்கையில் ஒரு பக்கமாய்ப் படுத்துக்கொண்டு, பல மணிநேரம் விளையாடுவேன். இதன் விளைவாக கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறேன். இந்த சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் செலவாகியிருக்கிறது.

இப்போது சாப்பிடவும் நடக்கவும் ஒருவர் உதவி தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார். அதோடு நின்றுவிடாமல், குழந்தைகளிடம் செல்போனை பெற்றோர் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த செய்தி அல்லது விடியோவைப் பார்த்த பலருக்கும் அடுத்து தங்களுக்கு என்ன நேரிடுமோ என்று அச்சம் ஏற்பட்டிருக்கலாம். எனவே அவர்களுக்கான அறிவுரை என்னவென்றால், நாள்தோறும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பவரா? அப்போது இதனை பின்பற்றுங்கள். செல்போனை எப்போதும் மிகத் தாழ்வாக வைத்துக் கொண்டு, தலையை அதிகம் குனிந்து பார்க்க வேண்டாம்.

அதிக நேரம் ஒரே நிலையில் அமர்ந்துகொண்டோ அல்லது படுத்தபடியோ செல்போன் பார்க்க வேண்டாம்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது எழுந்து சென்று நடந்து தண்ணீர் குடிப்பது போன்றவற்றை செய்யுங்கள். ஒரே நிலையில் அதிக நேரம் இருப்பதை தடுக்கும்.

பகல் நேரத்தை விடுங்கள், நள்ளிரவில் அதிக நேரம் செல்போன் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

வீட்டில் அதிக நேரம் செல்போன் பார்க்கும் அனைவருக்குமே ஷகிலாவின் நிலை ஒரு அபாய மணியாக எடுத்துக் கொள்ள வேண்டியது. உட்கார்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ இருப்பதே இந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடு பல்வேறு வகைகளில் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பெரியவர்களுக்கே இந்த பிரச்னை என்றால் குழந்தைக்கு சொல்லவே வேண்டாம். அவர்களை வேறு ஏதேனும் வரிகளில் பிசியாக வைத்துக்கொள்ள பெற்றோர் முயல வேண்டும் என்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.