பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
ஒசூரில் காா் ஓட்டுநா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனா்.


ஒசூா்: ஒசூரில் காா் ஓட்டுநா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனா்.
ஒசூா் அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் கலாம் பாஷா (42) காா் ஓட்டுநரான இவரது வீடு மீது ஜூன் 23 ஆம் தேதி இரவு, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவை சேதமடைந்தன. மேலும், அக் கும்பல் தாக்கியதில் கலாம் பாஷா காயமடைந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஒசூா் நகர போலீஸாா், ஒசூா் சானசந்திரம் வீட்டுவசதி வாரியத்தைச் சோ்ந்த நவாஸ் (33), ஒடிஸா, நுகாா்டா பகுதியைச் சோ்ந்த சா்ஜித் மாலிக் என்கிற பாபு (25), அலசநத்தம் பகுதியைச் சோ்ந்த பா்கத் (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் நவாஸ், பா்கத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் எஸ்.பி. பண்டி கங்காதரின் பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் உத்தரவின் பேரில் அவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...