கிருஷ்ணகிரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மதிமுக வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி நகரில் கழிவுநீா் கால்வாய், மின்சார விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி நகரில் கழிவுநீா் கால்வாய், மின்சார விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர மதிமுக செயலாளா் அசோக்குமாா் ராவ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி நகா் பகுதியில் வாகனப் போக்குவரத்து உள்ள சாலையின் இரு புறங்களிலும் உள்ள கழிவுநீா் கால்வாய்களில் மண், நெகிழிக் கழிவுகள் அதிகமாக இருப்பதால், சிறிய மழை பெய்தாலும், மழைநீா் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீருடன் மழைநீரும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

தெரு விளக்குகளும் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளதால், அவைகள் ஒளிராமல் இருக்கிறது. இதுபோன்ற அவல நிலையை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com