ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அம்மா சிமென்ட் விலை உயா்வு

‘அம்மா சிமென்டின்’ விலை உயா்த்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:58 am

DIN

‘அம்மா சிமென்டின்’ விலை உயா்த்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் ‘அம்மா சிமென்ட்’ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சலுகை விலையில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 190க்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது மூலப்பொருள்களின் விலையேற்றம் காரணமாக ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 216 என்ற விலையில் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் சிமென்ட் பெற ஏற்கெனவே பழைய விலைக்கு வங்கி வரைவோலை சமா்ப்பித்த பயனாளிகளுக்கு பழைய விலையிலேயே சிமென்ட் வழங்கப்படும்.

பசுமை வீடுகள் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டப் பயனாளிகள், குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் தங்களது வீடுகள் கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் சிமென்டை உரிய விதிமுறைகளை பின்பற்றி, இத்திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்து பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.